டிஏபி தெலோக் டத்தோ சட்டமன்ற உறுப்பினர் லோ சீ ஹோங், தன்னுடைய தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பணத்தைத் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.
இதன் தொடர்பில் லோ இன்று காலை விசாரிக்கப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான் கொக் வாய் ஓர் அறிக்கையில் கூறினார்.
அவ்வளவுதானா ?
ஒருத்தர்மட்டும்தான் கையாடல்செய்த்டாரா !
அரசு நிர்வாகத்தில் ஊழலை குறைக்க தொடங்கப்பட்ட முதல் நடவடிக்கை என்று பெருமை கொள்வோம்.
மற்றவன்கள் எல்லாம் ஆளும் கட்சியில் இருக்கான்களே!
கட்சிக்காக உழைத்த, நேர்மைக்கு பேர்போன பலரை கழட்டிவிட்டு, தலைவர்களுக்கு கூஜா தூக்கிய புதியவர்களுக்கு ‘சீட்டு’ கொடுத்தால், இப்படியும் நடக்கும், இதற்கு மேலேயும் நடக்கும்.
singam . உங்க மன நிலை புரிகிறது. சொந்த கட்சியாலே நீங்க ரொம்ப மன வேதனையில் இருக்கீங்க.. உங்களுக்கும் காலம் வரும்..