கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் ஆகிய தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பாஸ் கட்சியுடன் போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இதர கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விரு தொகுதிகளிலும் இந்த இஸ்லாமியக் கட்சிக்கு வலுவான ஆதரவு இருப்பதால் போட்டியிடுவதற்கு அக்கட்சியே சிறந்த தேர்வாக இருக்கும் என்று அவர் காரணம் கூறினார்.
“இந்த நாட்டில் மாற்றத்தை காண விரும்பும் கட்சிகள் அனைத்தும் பாஸ்சின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டும். சச்சரவில் இறங்காதீர்”, என்று அவர் கேட்டுக்கொண்டதாக சினார் ஹரியான் கூறுகிறது.
பாஸ் கட்சியும் அதிலிருந்து பிரிந்து சென்றுள்ள அமனாவும் இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் ஆகிய இரு தொகுதிகளிலும் ஜூன் 18 இல் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
பாஸ் கட்சி உறுப்பினர் இறுதியில் தன் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு தே.மு. -க்கு தேர்தல் இல்லாமலேயே வெற்றியைக் கொடுக்கவா?. அல்லது வேட்டு மனு முடிந்ததும் ஏதோ வேண்டா வெறுப்பாக போட்டியிட்டு தோற்கவா? பாஸ் கட்சியை நம்பி மோசம் போன கதைகள் ஏராளம். இன்னும் நம்பி மோசம் போக பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் படு முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும்.
அமான கண்டிப்பாக போடியிடவேண்டும். பாஸ் கட்சிக்கு பி என் வெற்றி பெற எல்லா தில்லு முளு வேலையும் செய்வனகள். கெஅடிலன் கட்சி குறிப்பாக அஸ்மின் அலி நம்பிக்கைக்கு உரியவன் அல்ல.
இந்த-PAS போன்ற மதவாத கட்சிகளை குப்பையில் போட வேண்டும் ஆனால் நடக்காது.உண்மையான மனிதாபிமானம் உள்ள கட்சிகளை பார்ப்பது அதிசயமே.
ஏதாவது ஒரு தொகுதியில் பாஸ் கட்சியும் அம்னோவும் நேரடி போட்டியை சந்திக்க வேண்டும். மற்றொரு தொகுதியில் மும்முனை, அதாவது, பாஸ், அம்னோ, அமானா என மூன்றும் ஒன்றை ஒன்று சந்திக்கவேண்டும். எது சக்தி வாய்ந்தது என இம்முறைகள் நல்ல வாய்ப்பளிக்கும்.
நீங்கள் போடியிடுவது அம்னோவுக்கு வெற்றி. அம்னோவின் கை பாவையாக மாறியதுதான் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை.உண்மையான மக்கள் பிரதிநிதி என்றால் ஒரு தொகுதியில் கோலகங்சார் தொகுதியில் போட்டியிடுங்கள். சுங்கை பேசார் தொகுதியை அமானா அல்லது மக்கள் நீதி கட்சிக்கு வழி விடுங்கள்.பிறகு தெரியும் மக்களின் செல்வாக்கு உங்களுக்கு எப்படி என்று.