பெர்சே இயக்கத்தின் தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் தென் கொரியாவில் குவாங்ஜு பரிசு என்ற மனித உரிமைகள் விருதை பெற்றுக்கொள்வதிலிருந்து மரியா தடுக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறையைக் கடந்து செல்ல தடை செய்யப்பட்ட போது மரியா இத்தடை விதிப்பைத் தெரிந்து கொண்டதாக பெர்சே அலுவலக உறுப்பினர் மன்டீப் சிங் கூறினார்.
இது புத்ரா ஜெயாவின் உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள டெக்ஸ்ட் செய்தியில் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு தாம் நாட்டை விட்டு வெளியேற எவ்விதத் தடையும் விதிக்கப்பட்டதில்லை என்று தொடர்பு கொண்ட போது கூறிய மரியா, மே 7 ஆம் தேதி நடைபெற்ற சரவாக் தேர்தலுக்கு முன்பு நியுயோர்க், ஜெனிவா மற்றும் லண்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்ததாக கூறினார்..
“இது நகைப்புக்குரியது.. இது தன்னிச்சையானது. இது சட்டவிரோதமானது என்பதுடன் (பெடரல்) அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது”, என்றாரவர்.
அம்மா! சட்டமாவது சாக்கடையாவது. எங்க நாட்டுல இதற்கு பேருதான் ‘ஜனநாயகம்.’ எங்கள எதிர்த்து பேசினா, இதுதான் நடக்கும், ஜாக்கிரதை! அல்தாந்துயா கதி தெரியுமில்ல. சீவிப்புடுவோம் சீவி.
ஜனநாயகத்துக்கு கிடைத்த சம்மட்டி அடி. வெட்க கேடு.
அம்மா மரியா அவர்களே–என்ன கேள்வியம்மா இது? மதம் மாறுவதற்கு முன் சிந்தித்து இருக்க வேண்டும். இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் பண்ணும் அநியாயம் இன்னுமா புரிய வில்லை? தனக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம்– இது நீ மாறி இருக்கும் சமயத்தின் அடிப்படை தானே?
பி என் வைப்பதுதான் சட்டம் இந்த நாட்டில்…..யாரும் எவரும் கேள்வி கேட்ககூடாது மீறினால் பி என் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சொந்த சட்டம் பாயும் நம்மால் என்ன செய்ய முடியும்!