பிகேஆர் பாண்டான் எம்பி அவருக்குத் தெரிந்த தகவலைப் பகிரங்கப்படுத்தினார் என்பதால் தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவருக்குப் பாதுகாப்பு கிடையாது எனப் பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறினார்.
“அவர் மார்ச் 24-இலும் மார்ச் 28-இலும் நடத்திய செய்தியாளர் கூட்டங்களில் தகவலைப் பகிரங்கமாக அறிவித்தார் என்பதால் அவருக்குச் சட்டப்படி பாதுகாப்பு கிடையாது”, என்றாரவர்.
அப்படித் தெரிவித்ததால் அவர் யாரென்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அதனாலேயே அவர் தகவலளிப்பவர் தகுதி பெறத் தவறிவிட்டார் என்று நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் நன்சி கூறினார்.
ஏப்ரல் 8-இல், பிகேஆர் உதவித் தலைவரும் தலைமைச் செயலாளருமான ரபிசிமீது இரகசிய ஆவணத்தை அம்பலப்படுத்தினார் என்றும் 1எம்டிபி தொடர்பான ஓர் இரகசிய ஆவணத்தைக் கைவசம் வைத்திருந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.