1எம்டிபி பெரிய பெரிய நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து பிரம்மாண்டமான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் அதன் கூட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
1எம்டிபி-இன் பிரச்னைகளால் அதன் கூட்டு நிறுவனங்கள் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குவதாக நிதி துணை அமைச்சர் ஜோகாரி அப்துல் கனி கூறியதாக தி எட்ஜ் நிதி நாளேடு அறிவித்துள்ளது.
“இப்போது என்ன ஆயிற்று என்றால்………துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (டிஆர்எக்ஸ்) இருக்கிறது அல்லவா …அது லேண்ட் லிஸ்ட் (ஆஸ்திரேலிய நிறுவனம்) டுடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் ஒரு திட்டம். ஆனால், அங்கு எதுவும் செய்ய முடியாதிருக்கிறது. ஏனென்றால் 1எம்டிபி விவகாரம் காரணமாக பங்காளி நிறுவனங்களுக்கு நிதிஉதவி கிடைக்கவில்லை.
“பண்டார் மலேசியாவிலும் அதே பிரச்னைதான். 1எம்டிபி விவகாரத்தின் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகள் கடனுதவி அளிக்க மறுக்கின்றன”, என்று ஜோகாரி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.