பெரும் நன்மைகளைப் பெற்ற மகாதீர் இப்போது பழிதூற்றுகிறார், லண்டனில் குமுறும் நஜிப்

 

freezeஇப்போது லண்டனில் இருக்கும் பிரதமர் நஜிப் அவரின் தற்போதைய எதிரியான முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் வெற்றி பெறுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்து முதுகில்குத்துவதாகும் என்று கூறினார்.

22 ஆண்டுகள் பிரதமராக அவர் இருந்த காலத்தில், பிஎன்னும் அம்னோவும் மகாதீரும் அவரது குடும்பத்தினரும் அளவற்ற நன்மைகளை அடைவதற்கு உதவியுள்ளன என்று நஜிப் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

கட்சியை நிராகரிக்க வேண்டும் என்று மகாதீர் கூறியதற்கு எதிர்மறையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன, ஏனென்றால் பிஎன் மற்றும் அம்னோ இல்லாமல் மகாதீர் பிரதமராக, ஏன் மந்திரியாகக்கூட வந்திருக்க முடியாது என்று நஜிப் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் மேம்பாட்டிற்காக எவ்வளவோ செய்துள்ள கட்சியை மகாதீர் நிராகரிக்கக்கூடாது, அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று நஜிப் மேலும் கூறினார்.

இது குறித்து ஏமாற்றமடைந்துள்ளீரா என்று கேள்விக்கு பதில் அளித்த நஜிப், “இது மகாதீரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதுதான்” என்றார்.