பிஎன், பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கிளந்தான் எம்பி-யைக் கவிழ்க்க முயல்கிறார்களாம், ஹுசாம் குற்றச்சாட்டு

musa hமுன்னாள்   பாஸ் உதவித் தலைவர்    ஹுசாம் மூசா,    கிளந்தான் மந்திரி புசாரைக் கவிழ்த்து   புதிய மாநில அரசை அமைக்கும் இயக்கம் ஒன்று   தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

பாஸிலிருந்து நீக்கப்பட்ட பின்னர்    நேற்று   முதல்முறையாக பொது   நிகழ்ச்சி   ஒன்றில்   கலந்துகொண்ட சாலோர் சட்டமன்ற உறுப்பினரான    ஹுசாம்,   கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப்மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக்   கூறும் சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட   கிளந்தான் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

“கடந்த இரண்டு,   மூன்று   மாதங்களாக பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள்    அஹ்மட் யாக்கூபைக்     கவிழ்க்கும்    நோக்கத்துடன்     சத்திய பிரமாணத்தில்    கையெழுத்திட    ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.   அவர்களின்    நோக்கம்   எம்பி-யைக் கவிழ்ப்பது மட்டுமே.

“எம்பிக்கு மாற்றாக யாரை அமர்த்தலாம்    என்பதை அந்த இயக்கத்தை   முன்னின்று நடத்துபவர் முடிவு   செய்வார்”, என்றாரவர்.

அந்த இயக்கத்துக்குத் தலைவர் யார் என்பதை   அவர்    தெரிவிக்கவில்லை. அந்த   இயக்கத்தில் தொடர்புள்ள சிலரைச் சந்தித்ததாக   ஹுசாம் கூறினார்.   ஆனால், இந்த வழியில் மந்திரி புசாரைக் கவிழ்ப்பதை அவர் ஆதரிக்கவில்லை.

மக்கள் மாநில அரசை மாற்ற விரும்பினால் பொதுத் தேர்தலில் அதைச் செய்யலாம் என்றார்.