‘தயிப்பின் மனைவிக்கு வழங்கும்போது மலேசியாவில் பிறந்த நாடற்ற பிள்ளைகளுக்கும் குடியுரிமை வழங்கலாம்தானே’

nieஅரசாங்கம்    சரவாக்   ஆளுனர் அப்துல் தயிப்பின்     துணைவியாருக்கு   ஆறே ஆண்டுகளில் குடியுரிமை வழங்கியுள்ளது. அதேபோல்   நாடற்றவர்களாக    உள்ள பிள்ளைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று   கோருகிறார் டிஏபி கூலாய் எம்பி தியோ நை சிங்.

2008-க்கும் 2015-க்குமிடையில்    மலேசியரை மணம் செய்துகொண்ட     வெளிநாட்டவர்    47,232  பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்,   2011-க்கும்  2016-க்குமிடையே   மலேசியாவில்    பிறந்த 131,810 பிள்ளைகள்    ‘நாடற்ற- குடிமக்களாக’   பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களின்    மலேசிய தந்தையர்கள்    வெளிநாட்டு மனைவியரை மணம் செய்து கொண்டதைப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே பதிவு செய்யாததால்    பிள்ளைகளை மலேசியர்களாக பதிவு   செய்ய முடியவில்லை.

அவர்கள் மலேசியாவில் பிறந்திருந்தும் அவர்களை மலேசியக் குடிமக்களாக   பதிவு செய்ய முடியவில்லை என்றாரவர்.

கூட்டரசு அரசமைப்பு, மலேசியாவில் பிறந்தவர்கள் அவர்கள் பிறக்கும்போது அவர்களின் பெற்றோர் குடிமக்களாகவோ கூட்டரசின் நிரந்தர வாசிகளாகவோ இருந்தால் அவர்களும் மலேசிய குடிமக்கள்தான் என்று கூறுகிறது.

பிள்ளைகளை மலேசியக் குடிமக்களாக பதிவுசெய்ய பெற்றோர் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூட்டரசு அரசமைப்பு கூறவில்லை என்றாரவர்.