அரசாங்க தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங், தாம் பொதுக் கணக்குக் குழுவிடம் ஒப்படைத்த 1எம்டிபி மீதான கணக்குத் தணிக்கை அறிக்கையில் மேல்விசாரணை தொடங்குவதற்கு போதுமான விசயங்கள் உள்ளன என்றார்.
“மேல்விசாரணைக்கு எங்கள் அறிக்கையே போதுமானது என்று நினைக்கிறேன். எங்கள் வேலை முடிந்தது.
“அடுத்த கட்டமாக அந்நிறுவனத்தின் ஆள்கள்மீது விசாரணை நடத்த பிஏசி பரிந்துரைத்துள்ளது.
“இனி, போலீஸ் அவர்களின் பணியைச் செய்யட்டும். யார் விசாரணை செய்ய விரும்பினாலும் நாங்கள் உதவியாக இருப்போம்”, என Channel News Asia (சிஎன்ஏ)-வுக்கு அளித்த நேர்காணலில் அம்ப்ரின் கூறினார்.
ஆனால், கணக்காய்வில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்ததா என்று வினவப்பட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்தார்.
முறைகேடுகளுக்குப் பதில் அளிக்க மறுத்ததன் மூலம் தணிக்கை அறிக்கை போதுமானதாக இல்லையே!
எல்லாரும் தங்களின் பின்புறத்தை காப்பாற்றிக்கொள்ளவே — உண்மையை சொல்லவேண்டியது தானே.