பேராக் பாஸ், கோலா கங்சாரில் மும்முனைப் போட்டி நிலவுமானால் வெற்றிபெறுவது கடினமாகி விடும் என்பதை ஒப்புக்கொள்கிறது.
முன்னாள் பாஸ் கட்சியினரைக் கொண்டுள்ள அமானாவும் அந்த இடைத் தேர்தலில் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்று பாஸ் மாநில ஆணையர் ரஸ்மான் ஜக்கரியா கூறினார்.
“மும்முனைப் போட்டி என்றால் முன்பு எதிரணிக்குக் கிடைத்த வாக்குகளில் ஒரு பகுதியை அமானா எடுத்துக் கொள்ளும்”, என்றவர் இன்று ஈப்போவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஸ் 1959ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்டு வரும் அந்த இடத்தில் தன்னுடைய பலம் என்னவென்பதை அமானா பார்க்க வேண்டும் என ரஸ்மான் வலியுறுத்தினார்.
அது புதிதாக உருவான கட்சி என்பதால் அங்கு அதற்கு ஆதரவு குறைவு.
அமானாவுக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுக்கும்படி பல தரப்புகள் வலியுறுத்தினாலும் பாஸ் விட்டுக் கொடுக்காது என்றாரவர்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், கோலா கங்சார் இடைத் தேர்தலுக்கான கட்சி வேட்பாளரை மே 28-இல் அறிவிப்பார் என்றும் ரஸ்மான் தெரிவித்தார்.