கோடீஸ்வரர் ஜோ லோ அமெரிக்க அதிகாரிகள் 1எம்டிபி மீதான விசாரணைகளை முடுக்கி விட்டிருப்பதால் தம் சொத்துகளை விற்று ரொக்கமாக்க முயன்று வருவதாக வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ) கூறியது.
யுஎஸ்$35 மில்லியன் மதிப்புள்ள ஓவியம் உள்பட பல சொத்துகளை அவர் விற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரியில் மற்றவற்றோடு Claude Monet மற்றும் Pablo Picasso வரைந்த ஓவியங்களையும் அவர் விற்றது ஓவிய பிரியர்களின் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. யுஎஸ்$54 மில்லியனுக்கு அவர் அந்த ஓவியங்களை விற்றிருக்கிறார். அது குறைந்த விலையாம். அதனால் அவருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அமெரிக்க புலனாய்வுத் துறை(எப்பிஐ) அதிகாரிகள் ஜோ லோ அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரணை செய்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்திருப்பதாக WSJ கூறிற்று.
அந்த 35-வயது கோடீஸ்வரர் ஓவியங்களையும் வீடுகளையும் வாங்குவதற்கும் பயன்படுத்திய பணம் சர்ச்சைக்குரிய 1எம்டிபி-இலிருந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி பல தகவல்களை WSJ அதன் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றை மலேசியாகினியால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அட்ரா சக்கா! அட்ரா சக்கா!