எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களில் பிரதமர் நஜிப் தலைமையிலான பாரிசான் நேசனலை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால் பாஸ் கட்சி அதன் வேட்பாளர்களை நிறுத்த வலியுறுத்துவதை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்று அந்த இஸ்லாமியக் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால், பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டியை பாஸ் வலியுறுத்துவது கடைசிநேரத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு பிஎன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சதியாக இருக்கக்கூடும் என்று மகாதீர் கவலை தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பானை “ராக்யாட்” என்று குறிப்பிட்ட மகாதீர், ராக்யாட் ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே போட்டியில் நிறுத்த வேண்டும். ஆனால், வருத்தமளிக்கும் வகையில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அக்கட்சியின் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறார். ராக்யாட் இன்னொரு வேட்பாளரை நிறுத்தினால் வெற்றியடையப் போவது பிஎன் என்றாரவர்.
ராக்யாட்டிற்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு, பாஸ் அதன் வேட்பாளரை நிறுத்தினால் அந்த வேட்பாளருக்கு ராக்யாட் அதன் முழு ஆதரவையும் அளிக்கும் தேவை ஏற்படும். அப்போதுதான் பாஸ் பெரும் வெற்றி பெறும், பிஎன் பெருந்தோல்வி அடையும் என்று மகாதீர் கருத்துரைத்தார்.
அப்படியே பாஸ் வெற்றி பெற்றாலும், அது அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை என்பதோடு அது அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட பிஎன்னின் அடிமையாகத்தான் இருக்கும் என்று மகாதிர் மேலும் கூறினார்.
எது எப்படியாயினும், கடைசிநேரத்தில் பாஸ் காலைவாரி விடும் என்ற அவரது கணிப்பில் மாகாதீர் திடமாக இருக்கிறார்.
“பாஸ் இதைச் செய்தால் நாம் ஆச்சரியப்பட மாட்டோம். நஜிப்பை உலகமே ஊழல் பேர்வழி என்று கருதுகையில், ஹாடி ‘பணமே ராஜா’ நஜிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
“அது ஹாடியின் தேர்வு. அது அவரது உரிமை. அதனால்தான் பாஸ் பிளவுப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தல்களில் பிஎன் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்று நஜிப் கூறிக்கொள்ள முடியாது.
நஜிப்பை அகற்றும் முயற்சி மக்கள் இயக்கம் மேற்கொண்டதாகும். நஜிப் வர்ணிக்க எத்தனிப்பது போல எதிரணி இயக்கத்தாலல்ல என்பதை மகாதீர் வலியுறுத்தினார்.
நஜிப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரே ஜனநாயகம் மீண்டும் மலரும் என்றார் மகாதீர்.
மக்களுக்கு வேறு வழியில்லாமலா? திருத்துங்கள். மக்களுக்கு வேண்டிய வழி இருந்தும் எருமாட்டு தத்துவத்திற்கு வழி கேட்டால், இடம் விட இதர கட்சிகள் கேனையரா?