அரசாங்கம் எந்தச் சட்டத்தைக் கொண்டு குடிமக்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கிறது?
இக்கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்கிறார் வழக்குரைஞர் ஷாரெட்சான் ஜொஹான்.
நேற்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் அரசாங்கத்தைக் குறைகூறுவோர் என்பதற்காக பயணத் தடை விதிக்கப்படுவதில்லை என்றும் கூட்டரசு அரசமைப்பை மீறி இருந்தால் மட்டுமே தடை விதிக்கப்படுகிறது என்றும் விளக்கமளித்திருந்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.
“இந்த ‘விளக்கம்’ எந்தச் சட்டத்தைக் கொண்டு மக்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்பதற்கு பதிலளிக்கவில்லை”, என்று ஷாரெட்சான் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
என்றுடா இங்கு அறிவுக்கு ஒத்து எதுவும் நடக்குது? எல்லாமே கேட்பதற்கு நாதி இல்லாமல் தானே நடக்கிறது?