பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பங்களா வீடு வாங்கிய விவகாரம் மீது விசாரணை நடத்திவரும் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை அறிக்கையை இன்னும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்ப்டைக்கவில்லை.
“இதுவரை எதுவும் வந்து சேரவில்லை. எம்ஏசிசி விசாரணை இன்னும் நடக்கிறது”, எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி கூறினார்.
எப்போது விரும்புகிறார்களோ அப்போது விசாரணையை ஒப்படைக்கலாம். அதைக் கொடுப்பதற்குக் காலக் கெடு எதையும் விதிக்கவில்லை என்று அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
இந்த பங்களா அரசுக்கு சொந்தமா? ஒன்றும் இல்லாததை வைத்து நாடகம் ஆடும் கேவலம்.