எம்எசிசி குவான் எங் வீட்டிற்குச் சென்றது அதிரடிச் சோதனையல்ல, கோபிந்த் சிங் கூறுகிறார்

 

MACCtoCMhouseஜாலான் பிஹோர்னிலுள்ள பினாங்கு முதலமைச்சர் வீட்டில் எம்எசிசி அதிகாரிகள் பிற்பகல் மணி 3.00 லிருந்து இருந்தனர்.

ஆனால், த ஸ்டார் கூறியிருப்பது போல அது அதிரடிச் சோதனையல்ல என்று முதலமைச்சர் குவான் எங்கின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

“அதிரடிச் சோதனை என்றால் எம்எசிசி முன்னறிவிப்பு இல்லாமல் உங்கள் வீட்டிற்குச் செல்வார்கள்”, என்று கோபிந்த் மலேசியாகியினிடம் கூறினார்.

நடந்தது அதுவல்ல. செய்தித்தாள்களில் கூறப்பட்டிருப்பது சரியானதல்ல என்று அவர் மேலும் கூறினார்.

மேற்கொண்டு வாக்குமூலம் பெறுவதற்காக குவான் எங்கை பினாங்கு எம்எசிசிக்கு வருமாறு காலை மணி 10க்கு அவரிடம் கூறப்பட்டது. அவ்வாறே அவரும் அவரது துணைவியார் பெட்டி சியுவும் அங்கு சென்றனர் என்று கோபிந்த் விளக்கமளித்தார்.

பின்னர், அவரின் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக எம்எசிசி குவா எங்கிடம் கூறியது. அவரும் ஓகே என்றார் என்று கோபிந்த் மேலும் கூறினார்.
த ஸ்டாரின் செய்திப்படி குவான் எங்கும் அவரது துணைவியாரும் எம்எசிசி கட்டடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில் அவரது வீடு அதிரடிச் சோதனை செய்யப்பட்டது.

மேலும், அச்செய்திப்படி எம்எசிசி அதிகாரிகளும் வழக்குரைஞர்கள் ஆர்எஸ்என் ராயர் மற்றும் ராம்கர்பால் சிங் ஆகியோரும் அவ்வீட்டிலிருந்து பிற்பகல் மணி 2.55 க்கு வெளியேறினர்.

ராயரை தொடர்பு கொண்ட போது, ஐந்து எம்எசிசி அதிகாரிகள் மூன்று கார்களில் “வழக்கமான சோதனை வேலைக்கு” சிஎம்மின் வீட்டிற்கு வந்தனர் என்றும், மேற்கொண்டு வாக்குமூலங்களை குவாங் எங் மற்றும் அவரது துணைவியாரிடம் பெற்ற பின்னர் அவர்கள் சிஎம்மின் வீட்டிற்கு வந்தனர் என்று ராயர் மேலும் கூறினார்.

பிற்பகல் மணி 4 க்கு அந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் மேற்கொண்டு எதுவும் கூறவில்லை என்றார் ராயர்.

பினாங்கு எம்எசிசி இயக்குனர் எம். சமராஜு இவ்விவகாரம் குறித்து எதுவும் கூற மறுத்து விட்டார்.