அண்மையில் கோலாலும்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கலாம் என வழக்குரைஞர் ஷாரெட்சான் ஜொஹான் கூறினார்.
ஆனால், வழக்கு தொடுப்பவர்கள் மாநரரட்சி மன்ற அதிகாரிகளின் கவனக்குறைவுதான் வெள்ளம் ஏற்பட காரணம் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
“உதாரணத்துக்கு பொறியியல் நிபுணர்களைச் சாட்சியமளிக்க வைக்கலாம்”, என்றார்.
சாட்சிகளின் வாக்குமூலங்கள், செய்தித்தாளில் வந்த செய்திகள், வெள்ளத்தைக் காண்பிக்கும் நிழற்படங்கள், பழுதுபார்க்கச் செலவிட்ட தொகைக்கான பற்றுச் சீட்டுகள் ஆகியவை ஆதாரங்களாகும் என்றாரவர்.
வழக்கு நடத்த நிறைய செலவாகும் என்பதால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுக்க முன்வருவதில்லை என்றவர் சொன்னார்.
இதனிடையே, யாரும் வழக்கு தொடுத்தால் கோலாலும்பூர் மாநகரம் மன்றம் அதை எதிர்கொள்ள தயார் என மாநகர மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்ட் அசீஸ் கூறினார்.