டாக்டர் மகாதிருடன் இணைந்து பணியாற்றும் பிகேஆர் தலைவர்கள் கட்சியின் அடிப்படை நோக்கத்தைவிட்டு அதாவது மக்களுக்காக போராடும் நோக்கத்திலிருந்து விலகிச் சென்று விடக் கூடாது என்பதைச் சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நினைவுறுத்தினார்.
ஒரு சலசலப்பை ஏற்படுத்திய தம் கடிதம் பற்றி விளக்கிய அன்வார், குடிமக்கள் பிரகடனம் தொடர்பில் முன்னாள் பிரதமருடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு பிரச்னை அல்ல, ஆனால் மகாதிரை அதிகாரம் செலுத்த இடமளித்து விடக் கூடாது என்றார்.
“மக்கள் விவகாரங்கள்தாம் தலையாய பிரச்னைகள். அவற்றைவிட்டு விலகிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்”, என்றார். இன்று காலை ஒரு வழக்கு தொடர்பாக கூட்டரசு நீதிமன்றத்துக்கு வந்த அன்வார் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
சரியாகத்தான் கூறுகிறார் அன்வார். மகாதீருக்குக்கும் நாஜிப்பிற்கும் உள்ள பிரச்சனை என்ன ? மக்கள் நலனா ? தனிப்பட்ட நலனா ? ஜனனாயக முறையில் வீழ்த்த பட வேண்டிய நாஜிப்பை ; மக்கள் பிரகடனம் என்ற போர்வயில் மாமன்னரிடம் மகஜர் கொடுத்து நீக்க முயல்வது எதிர் காலத்தில் தவறான வழி காட்டலுக்கு வழி வகுக்கும்.!