நாடற்ற பிள்ளைகளுக்காக சட்டத் திருத்தம் தேவையில்லை-ஜாஹிட்

noநாடற்ற  பிள்ளைகள்  விவகாரத்துக்காக  சட்டத்தில்  திருத்தம்  செய்ய  வேண்டிய  அவசியமில்லை  எனத்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஜிட்  ஹமிடி  கூறினார்.

கூட்டரசு  அரசமைப்பு  குடியுரிமை  பெறுவதற்கான  விதிமுறைகளைத்  தெளிவாகவே  எடுத்துரைக்கிறது  என்றாரவர்.

“மலேசியாவில்  பிறக்கும்  பிள்ளைகளுக்கு  அவர்களின்  பெற்றோர்  அவர்களின்  நாடுகளிடம்தான்  பயணப்  பத்திரங்களுக்கும்  அடையாள  ஆவணங்களுக்கும்  விண்ணப்பித்துக்  கொள்ள   வேண்டும்”, என்றவர்  நாடாளுமன்றத்தில்  எழுத்து  வடிவில்  வழங்கிய  பதிலில்  கூறினார்.

நாடற்ற  பிள்ளைகளைச்   சட்டப்பூர்வ  குடிமக்களாக்கும்  நோக்கில்  சட்டத்  திருத்தம்  கொண்டுவரப்படுமா  என்று   ராம்கர்பால்  சிங் (டிஏபி- புக்கிட்  குளுகோர்)  கேட்டிருந்த  கேள்விக்கு  ஜாஹிட்  இவ்வாறு  பதிலளித்தார்.

மலேசியாவில்  150,000  நாடற்ற  பிள்ளைகள்  இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நாடற்ற  பிள்ளைகள்’  என்று  சொல்லப்படுவதையும்  ஜாஹிட்  ஏற்கவில்லை.  அவர்கள்  நாடற்றவர்கள்  அல்லர்  ஏனென்றால்  அவர்களின்  பெற்றோர்  வெளிநாட்டவர்  என்றாரவர்.