நஜிப்: Aabar BVI நிறுவனத்துக்கு யுஎஸ்$3.5 பில்லியனை மாற்றிவிடும் ஆவணத்தில் நான் கையெழுத்திடவில்லை

transaction1எம்டிபி,  இண்டர்நேசனல்   பெட்ரோலியம்  இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனியின்(ஐபிஐசி)  துணை  நிறுவனம்  என்று  நம்பி  பிரிட்டிஷ்  வர்ஜின்  தீவில்  உள்ள  ஒரு  நிறுவனத்துக்கு  யுஎஸ்$3.5 பில்லியன்  அனுப்பப்பட்டதில்  தாம்  சம்பந்தப்படவில்லை  என்பதைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மறைமுகமாக  உணர்த்தியுள்ளார்.

பணத்தை  மாற்றிவிட  தம்  கையெழுத்து  தேவையில்லை  என்றாரவர்.

“உங்கள்  தகவலுக்கு,  1எம்டிபி,  பல  தடவைகளாக,  மொத்தம்  யுஎஸ்3.51 பில்லியனை  Aabar Investments PJS Limited-உக்குச்   செலுத்தியுள்ளது.

இச்செலுத்தல்கள்  எல்லாமே  ஏற்கனவே  செய்துகொண்டுள்ள  ஒப்பந்தப்படியும்  இயக்குனர்  வாரியத்தின்  ஒப்புதலுடனும் உத்தரவுப்படியும்தான்  செய்யப்பட்டுள்ளன.

“இப்பணப்  பரிவர்த்தனைக்கு  பிரதமரின்  கையெழுத்தைப்  பெற  வேண்டிய  அவசியமில்லை”. பிரதமர்  இன்று  நாடாளுமன்றத்தில்  டிஏபி, பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவாவுக்கு  அளித்த  எழுத்துப்பூர்வமான  பதிலில்  இவ்வாறு  கூறினார்.

Aabar Investments PJS Limited  என்பது  ஐபிஐசி-இன்  துணை  நிறுவனம்தான். ஆனால் பிரிட்டிஷ்  வர்ஜின்  தீவில்  பதிவு  செய்யப்பட்டிருக்கும்  Aabar Investment PJS Limited (Aabar BVI)  என்பது  வேறொரு  நிறுவனம், அதற்கும்  அபு  டாபி   அரசு  நிறுவனமான  ஐபிஐசிக்கும்  தொடர்பில்லை.

ஆக, யுஎஸ் 3.5 பில்லியன்  ஒரு தப்பான  நிறுவனத்துக்குச்  சென்றிருக்கிறது. அப்பணம்  இப்போது  எங்கே  உள்ளது? யாருக்கும்  தெரியவில்லை.