ஹூடுட் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் லியோங் யோங் கோங் மசீசவிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை அம்னோ பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மசீசவும் அரசமைப்புச் சட்டத்தையும் மக்களின் உரிமைகளையும் தற்காக்கத் தவறி விட்டது என்றும் அவர் கூறினார்.
பாரிசான் உறுப்பினர் என்ற முறையில் மசீச அம்னோவின் நன்மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. ஆகவே, இந்த ஹூடுட் பிரச்சனைக்கு புதியதோர் வழி ஏற்படுகிறவரையில் தாம் மசீசவிலிருந்து விலகிக்கொள்வதாக ஓரியன்டல் டெய்லி பதிவிறக்கம் செய்துள்ள வீடியோவில் கூறியுள்ளார்.
ஆனால், அரசாங்கப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றாரவர்.
“நான் ராஜினாமா செய்யமாட்டேன் (ஆட்சிக்குழு பதவியிலிருந்து), ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. அரசமைப்புச் சட்டத்தைத் தற்காக்காமல் தவறு செய்தது அம்னோவும் பிஎன்னும்தான்”, என்று டாக்டர் லியோங் விளக்கமளித்தார்.
கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் லியோங் சரியான முடிவு எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். அம்னோ அரசுக்கும் , ம.சீ.ச. கட்சிக்கும் ஒரு செருப்படி. ம.இ.கா. வை சொல்ல வேண்டாம் அது செத்துப் போன கட்சி.
இதெல்லாம் ஆரம்பம் தாண்டா. 1957க்கும் இப்போதைக்கும் எவ்வளவு மாற்றம்? இவன்களின் பொய் மேலும் மேலும் அதிரடியாக இருக்கும்.
ம.இ.காவில் இருந்து எந்த கழுதையும் வெளியேறவில்லை எங்கே பொதி சுமக்க போய்டாங்கனு தெரில..