பாஸ் தலைவர் அப்துல்லா ஹாடி அவாங்கின் தனிப்பட்ட உறுப்பினர் மசோதா இஸ்லாமிய கிரிமினல் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த அனுமதிப்பது பற்றியதல்ல என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.
நஜிப்பின் கூற்றுப்படி, தற்போது ஷரியா நீதிமன்றங்கள் அதிகபட்சமாக ஆறு ரோத்தான் அடிகள்தான் கொடுக்க முடியும். இன்னும் கூடுதலாக சில ரோத்தான் அடிகளைக் கொடுப்பதற்கு இந்த மசோதா வகைசெய்கிறது என்றார்.
மேலும், இது ஷரியா நீதிமன்றங்களையும் முஸ்லிம்களை மட்டுமே சம்பந்தப்படுத்துகிறது. அதற்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று நஜிப் அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமை வகித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) (திருத்தம்) மசோதா 2016 என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
தெளிவாக உள்ள மக்களை குழப்புவதில் பாஸ் தலைவரும் அம்னோ தலைவரும் சிறப்பாக செயல் படுகிறார்கள்!
அடு ஹுடுட்வ் சட்டம் இல்லையா ? அப்படி என்றால் PAS அதிக ஆர்வமாய் இரு பத இக்கு காரணம் ? .
ஊழலும், லஞ்சமும் செல்வ செழிப்பான நமது நாட்டை சீர்குழைத்து விட்டன. இந்த இரண்டு விஷயங்களுக்கு மட்டும், இந்த இஸ்லாமிய சட்டங்களில் எவ்வித தண்டனைகளையும் காணோம்.