புடிமான் சுங்கை புசார் பாரிசான் வேட்பாளர்

 

budimanஎதிர்வரும் சுங்கை புசார் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் வேட்பாளராக போட்டியிட தற்போதைய சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் புடிமான் முகமட் ஸுடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று சுமார் 2,000 ஆதரவாளர்கள் பாசிர் பாஞ்சாங் பாரிசான் நேசனல் கமான்ட் சென்டரில் குழுமியிருந்த கூட்டத்தில் அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிட் இந்த அறிவிப்பைச் செய்தார்.

இந்த தலைவர் நல்ல பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் தாமே நேரடியாக இங்கு வந்து இந்தப் பிரிவுக்கு உதவி செய்யப் போவதாக ஹமிடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்னோ உயர்மட்ட தலைவர்களில் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிஎன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன், கெராக்கான் துணைத் தலைவர் கோகிலன் பிள்ளை மற்றும் பிபிபியின் மெக்லென் டிகுருஸும் அங்கிருந்தனர்.