பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் சட்டவரைவு குறித்து பிஎன் பங்காளிக்கட்சிகளான மசீசவும் மஇகாவும் தம் முன்னாள் பங்காளிக் கட்சியான டிஏபி-யை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளன என்றார்.
பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் இருந்தபோதே அது பற்றி டிஏபியுடன் விவாதித்திருப்பதாகவும் இருந்தும் அது புரிந்து கொள்ளாதிருக்கிறதே என்றவர் வருத்தப்பட்டார்.
“1993-இலேயே டிஏபி-யுடன் பேச்சு நடத்தினோம்.
“முறைப்படி பார்த்தால் இவ்விவகாரத்தில் (ஹுடுட்டில்) முஸ்லிம்-அல்லாதார் சம்பந்தப்படக் கூடாது. மசீசவுக்கும் மஇகாவுக்கும் புரிந்துள்ளது. ஆனால், டிஏபிக்குப் புரியவில்லை”, என ஹாடி ஏமாற்றம் தெரிந்தார்.
ஹாடி இப்படிக் கூறுகிறார். ஆனால், நேற்று மசீசவும் மஇகாவும் மற்ற பிஎன் பங்காளிக்கட்சிகளுடன் சேர்ந்து அச்சட்டவரைவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட்டுச் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்தின.
சட்டப்படி பார்த்தால் இந்நாட்டின் அரசியல் சாசனம் எவ்வொரு தனி மதத்தைச் சாராமல் இருப்பதால், முஸ்லிம்-அல்லாதாரும் இந்நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் இதில் கருத்துக் கூற உரிமை உள்ளது. அது பல்லின மத மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக இருந்தால் அதை எதிர்க்க முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் உரிமை உள்ளது. இடைத் தேர்தல் வந்தவுடன், மக்கள் மனதை 1MDB – வின் ஊழலிருந்து திசை திருப்ப, நிலா கட்சியும், கிறிஸ் கட்சியும் சேர்ந்து நாடகமாடவும், அதனை எதிர்ப்பது போல் ஒரு மாயையை தே. மு பங்காளிக் கட்சிகள் செய்வது பெரிய வேடிக்கை. இது வரையில், தே.மு. சம்பந்தப்பட்ட மக்கள் தூவேசமுடைய விவகாரங்களை அம்னோவுடன் கட்சிக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்வது நலம் பயக்கும் என்று சொல்லி வந்த அந்த கட்சிகள் இந்த விசயத்தில் மட்டும் அம்னோவைத் தவிர்த்து தாமாக வந்து செய்தி அறிக்கை விடுவது ஏன்? எல்லாம் இடைத் தேர்தல் நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும். ஜ.செ.க. – யை ஒட்டு மொத்தமாக சாடி வரும் அன்பரும் இதனை கருத்தில் கொண்டு நடுநிலையான கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.
அவன்களுக்கு தான் வாய் பேச வராதே? அது உன்னைப்போன்ற ஈன ஜென்மங்களுக்கு சாதக மாகிவீட்டதே. போடா வெங்காயம். நீ எல்லாம் ஒரு மத தலைவன்.
இன விவகாரங்களை வைத்து அம்னோ அரசியல் பிழைப்பு நடத்துகிறது. மத விவகாரங்களை முன் வைத்து பாஸ் அரசியல் நாடகாமாடுகிறது. கூடிய விரைவில் இவ்விரண்டும் ஒன்று சேர்வதற்க்க்காகவே இத்திட்டம். முசுலிம் அல்லாத கட்சிகளை பாரிசானை விட்டு வெளியேற்ற அம்னோவின் சித்து விளையாட்டு இது. முசுலிம் அல்லாதவர்களுக்கும், மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் இந்நாடு கூடிய விரைவில் இருண்ட பாலைவனமாகப் போகும் போல் தெரிகிறது.
வறண்ட பாலைவனம் என்பதே சரியாகும்.
உண்மைதான்!ம இ கா ஹூடுட் சட்டத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறது முன்னாள் பெருந்தலைவரும் இந்நாள் மூத்த தலைவர்களும் வாயையும் பின்னாடியையும் மூடி கொண்டிருக்கிறார்கள் ரொம்ப சந்தோசமுங்க!உங்களுடைய வீரத்தை இன்னொரு இந்தியநிடம்தான் காண்பிப்பீர்கள்
தோக் குரு நிக் அசிஸ் இல்லாமல் போனது, இவனுக்கு குளிர் விட்டு போனது ! நிக் அசிஸ் பல முறை இவனிடம் கூரி விட்டார், உனக்கு விருப்பம் இருந்தால் நீ தனியாக அம்னோவில் சேர்ந்து விடு என்றார் , நாதாரி நாட்டுக்கே பெரிய குடைச்சல் !
நிக் அஜீஸ் அவர்கள் உண்மையான இஸ்லாமியர் அருமையான மனிதர் .இவன் காச வணங்கிடு பதவிவிக்காக உம்னோ கு கோட்டை தாங்கிகள்.
நிக் அசிஸ் இப்போது இல்லை, இருந்தால் எப்படி பேசுவாரோ?