ஆட்சியாளர்கள் தலையிட்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அதிகார அத்துமீறல்களை” நிறுத்துவார்கள் என டாக்டர் மகாதிர் முகம்மட் நம்புகிறார்.
சட்டத்தில் அதற்கு இடமில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.
“ஆனாலும், நஜிப்பின் அதிகார அத்துமீறல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ஆட்சியாளர்களுக்கு வழிவகைகள் உண்டு.
“மக்கள் ஆட்சியாளர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்”, என மகாதிர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருக்றார்.
காக்கா! நல்ல காமடி போ…
துன் அவர்களே , உங்கள் ஆட்சி காலத்தில் பண்ணாத கூத்தா இப்போ நடக்கிறது ? உன்னைத்தவிர இந்த நாட்டை ஆளும் திறன் வேறு யாருக்கும் இல்லை என்று நினைப்பது உன் அறிவிலி தன்மையை காட்டுவதாக உள்ளது . யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு நீங்களே உதாரணம் . சாதாரண தொழிலாளி மகன் நான் கூட உங்களை விமர்சனம் செய்யும் படி ஆனதுதான் வருத்தமளிக்கிறது . வருந்துகிறேன் ! சுல்தான்களின் அதிகாரத்தை குறைத்தது யார் ?? ஒரு சட்டம் பாராளும் மற்றதில் நிறைவேற்றி அதை அமுல் படுத்த அரசரின் பார்வைக்கு போனதும் 14 நாட்களுக்குள் – அரசர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும் அந்த சட்டம் தானாகவே அமுலுக்கு வரும் என்ற திருத்தத்தை கொண்டு வந்தது யார் ?? மாமன்னரை ஒரு பொம்மையாக அமரவைத்தது யார் ?? இப்போ குத்துதே குடையுதே என்று சுல்தான்கள் காலை பிடிப்பது எதற்கு ?? காலை வாரி விடவா ?// சொல்லுக்க்க போஸ் ???
தோழர் ராஜுல்லா ! நான் நினைத்ததை சொல்லிவிட்டார் ! நன்றி ,
அன்பர் நந்தா நாம் மட்டும் இல்லை. சில மலாய்க்காரர்கள் இந்த காக்காவை கரிச்சி கொட்டிடாங்க்கா.. ஆனால் இவன் இன்னும் நல்லதான் இருக்கான். இன்னும் ஆரோக்கியதோடு அவன் எதிரிகளை சாமளிக்குறான் .. போகிற போக்கை பார்த்தா அடுத்த பிரதமரா கூட ஆகலாம் ..
“வழிவகைகள்” எல்லாம் தெரிந்த கர்ப்பால் சிங் இப்போது இல்லை! அதனால் யோசிக்க வேண்டிய விஷயம்!
எந்த ஆட்சியாளர்கள்? ஜோஹூர் மட்டும் தான் சத்தம் போடுகிறது. மற்றவன்கள் எல்லாம் அரசின் கையை எதிர்பார்த்தே இருக்கின்றான்கள்– சாபா சரவாக்கை நம்ப முடியாது– அங்குள்ள சீனர்களை தவிர பரும்பாலான மண்ணின்மைந்தர்கள் அரசின் எலும்பு துண்டுக்குத்தான் காத்திருக்கின்றனர்- சுதத்ந்திரத்தின்போது இருந்த முறையையே நாம் தட்டிக்கேட்க வேண்டும். முடியுமா?
மகாதிர்மாமாக்!அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது போல் உங்களுக்கு இது போதாது இன்னும் நிறைய இருக்கு
ஒருவேளை நீங்கள் பிரதமராக இருந்து இதுபோன்ற ஒரு நிலை வந்தால் நீங்கள் ஆட்சியாளர்களை தலையிட விட்டு விடுவீர்களா திரு.மாமாதீரரே?
போ போ மீண்டும் டீ ஆத்துர வேலை கிடைக்குமானு பாரு.
என்ன சொல்றிங்க நீங்க மகா ஜனங்களே ? நாஜிப் நல்லவரா கெட்டவரா? துன் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார். தவறை உணர்ந்து நல்லது செய்து பாவத்தை போக்க விரும்கிறார் . நடக்கட்டும்.
en thaai thamizh அவர்களே !
தற்பொழுது PERAK சுல்தானின் பேச்சிலும்/செய்கையிலும் மாற்றம் தெரிகிறது.
நஜிப் இந்திய மாணவர்களுக்கு மேற்கல்வி கற்க ஓரளவு உதவியிருக்கிறார். தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிறையவே உதவியிருக்கிறார். ஆனால் அந்தப்பணம் வழக்கப் போல சாமிவேலு ஆகிவிட்டது! துன் அசல் காக்கா! அவர் தவறை உணரமாட்டார்.இந்திய சமுதாயத்திற்கு அவர் செய்த துரோகம் என்றென்றும் மன்னிக்க முடியாதது!