மே 22-இல் கோலாலும்பூரில் வீடற்றுச் சுற்றித் திரிந்தோரைப் பிடித்து அவர்களைத் தொலைதூர இடங்களில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுவதை கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்தது.
“அது தப்பான ஒரு புரிதல். அதைச் செய்தது இன்னொரு அரசு அமைப்பு. டிபிகேஎல் அல்ல.
“டிபிகேஎல் லாரிகளையும் சில உதவியாளர்களையும் மட்டுமே கொடுத்துதவியது”, என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் லோக பாலன் இன்று தெரிவித்தார்.
அந்நடவடிக்கையை மேற்கொண்டது தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரியம் என்றவர் சொன்னார்.