பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹக்கல், 30, கோலாலும்பூரில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களிடம் பாலியல் வல்லுறுவு புரிந்ததை ஒப்புக் கொண்டார்.
2006-க்கும் 2014-க்குமிடையில் சுமார் 200 சிறார்களிடம் அவர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பிபிசி ஒலிபரப்புக் கழகம் கூறியது.
ஹக்கல்மீதான வழக்கு பிரிட்டனில், இங்கிலாந்து வேல்ஸின் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நாளை அது முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் மோசமான பாலியல் குற்றம் என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுப்பது பற்றி ஆலோசிப்பதாக நீதிபதி பீட்டர் ரீக் இதற்குமுன் நடந்த விசாரணையில் கூறியதாக தெரிகிறது.
ஹக்கல்மீது 91 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எழுபத்தொன்றை மட்டுமே அவர் ஒப்புக்கொண்டார். முதல் விசாரணையின்போது அவர்மீதான குற்றப்பத்திரிகையை வாசித்து முடிக்கவே ஒரு மணி நேரத்துக்குமேல் ஆனதாம்.