எதிர்வரும் கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட அமனா கட்சி அணு விஞ்ஞானி அஹமட் தெர்மிஸி ரமலியை வேட்பாளராக இன்றிரவு அறிவித்தது..
இத்தொகுதி அம்னோவின் தொகுதியாக இருந்து வந்துள்ளது. இத்தொகுதியில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது.
நாடு 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் இந்நேரத்தில் தாம் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது தமக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது என்று 61 வயதாக தெர்மிஸி கூறினார்.
தெர்மிஸியின் வேட்பாளர் நியமனத்தை அமனாவின் தலைவர் முகம்மட் சாபு இன்றிரவு கோலகங்சாரில் அறிவித்தார். அவருடன் இதர பாக்கத்தான் ஹரப்பான் தலைவர்களும் இருந்தனர்.
நல்ல தேர்வு. பாஸ் கட்சியும், சில சுயேட்சைகளும் போட்டியிடுவதால், வாக்குகள் சிதறக்கூடும்.பக்காத்தானுக்கு வெற்றி என்பது சற்று கடினமே.