இன்சுலின் இருக்கையில் கைகாலை வெட்ட வேண்டியதில்லை: ஹாடிக்குப் பதிலடி

tanஹுடுட்  சட்டம்  குற்றங்களைக்  குறைக்கும்  என்ற  வாதத்தை  முன்வைத்துள்ள  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்குக்குக்  கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங் பதிலடி  கொடுத்திருக்கிறார்.

“உடலுறுப்புகளை  வெட்டி  எடுப்பது  மட்டுமே  நீரிழிவுக்குத்  தீர்வு  அல்ல. இப்போது  இன்சுலின்  உள்பட  வேறு  சிகிச்சை  முறைகளும்  இருக்கின்றன. காலத்தோடு  ஒட்டிச்  செல்ல  வேண்டும்”, என  டான்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

நீரிழிவு  நோயாளியின்  உயிர்  காக்க  உடலுப்புகளை  வெட்டி  எடுப்பது  அவசியம்  என்பதுபோல்  குற்றங்களைக்  குறைக்க  ஹுடுட்  ஒன்றே  வழி  என்று  ஹாடி  நேற்றிரவு  கூறியிருந்தார்.

ஒரு  மருத்துவர்  நோயாளியின்  உடலுறுப்புகளை  வெட்டி  எடுப்பதை  யாரும்  ஆட்சேபிப்பதில்லை  ஆனால்,  திருட்டுக்கு  ஹுடுட்  தண்டனை  கொடுப்பதை  மட்டும்  ஆட்சேபிப்பது  ஏன்  என்று  பாஸ்  தலைவர்  வினவினார்.