வேண்டுமென்றே இரண்டு இடைத் தேர்தல்களிலும் தோல்விகாணத் திட்டமிட்டிருக்கிறது என்று கூறப்படும் ஆருடங்களை பாஸ் மறுத்தது.
கோலா கங்சாரிலும் சுங்கை புசாரிலும் பிஎன் வேட்பாளர்களை எதிர்த்து பாஸ் முழுமூச்சாக போராடும் என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
டிஏபிதான் பிஎன்னுக்கு இடமளித்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறது என்றாரவர்.
“பிஎன்னை எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி பாஸ்தான் என்பதை டிஏபி உணர வேண்டும். அப்படி இருக்க டிஏபி ஏன் அமனாவை ஆதரிக்கிறது?”, என்று ஹாடி வினவினார்.
இரண்டு இடைத் தேர்தல்களிலும் பாஸ் போட்டியிடுவது அது பிஎன்னுக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்பதைக் காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.