பிஎன் வேட்பாளர் கல்வியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்

budimanசுங்கை  புசார்  இடைத்  தேர்தலில்  போட்டியிடும்  பிஎன்  வேட்பாளர்   புடிமான்  முகம்மட்  ஸோடி வெற்றி  பெற்றால்  அங்குள்ள  மக்களின்  கல்வியையும்  பொருளாதாரத்தையும்  மேம்படுத்துவதில்  கவனம்  செலுத்தப்போவதாகக்  கூறினார்.

இவ்விரு  துறைகளும்  பச்சைப்பசேல்  என்ற  வயல்காடுகளையும்  கிராமிய  வாழ்க்கையையும்  கொண்ட  அத்தொகுதியின்  மேம்பாட்டை  ஊக்குவிக்கும்  என்றாரவர்.

“சுங்கை  புசாரில்  உள்ள  எங்களுக்கு  மிகப்  பெரிய விற்பனை  மையங்கள்  தேவையில்லை. நில  அமைப்பை  நாங்கள்  மாற்ற  விரும்பவில்லை. கிராமியச்  சூழலை அப்படியே  வைத்துக்கொள்ளவே  விரும்புகிறோம்”, என்று  புடிமான்  கூறினார்.
ஆனால்,  மக்கள்  பரந்த  அறிவைப்  பெற்றிருக்க  வேண்டும்  என்றவர்  விரும்புகிறார்.  அப்போதுதான்   இருக்கும்  வளங்களைக்  கொ்ண்டு  வருமானத்தைப்  பெருக்கிக்கொள்ளும்  வழிவகைகளைக்  காண  முடியும்  என்றாரவர்..