1எம்டிபிமீது குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்குற்றச்சாட்டுகளை இடைத் தேர்தல் பரப்புரைகளின்போது திரும்பவும் கூறுவாரா, அதற்கான துணிச்சல் இருக்கிறதா என அம்னோ அமைச்சர் சைட் கெருவாக் கேட்கிறார்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி பணத்தில் ரிம42 பில்லியனைத் திருடினார், ரிம50 பில்லியனைத் திருடினார் என்று மகாதிர் கூறினார்.
“குற்றச்சாட்டுகளை அவர் மீட்டுக்கொள்ளவில்லை, சொன்னதற்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. ஆகவே, அதே குற்றச்சாட்டை சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல் பரப்புரைகளின்போது திரும்பக் கூறும் துணிச்சல் உண்டா என்று மகாதிருக்கு சாவால் விடுகிறேன்”, என சாலே தம் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
மகாதிரை “நடப்பில் எதிரணித் தலைவர்” என்று கேலி செய்த சாலே, இப்போதெல்லாம் அவர் 1.2மில்லியன் பேர் கையொப்பமிட்டதாகக் கூறப்படும் குடிமக்கள் பிரகடனம் பற்றிப் பேசுவதில்லை என்று கூறினார். ஏனென்றால், அதில் இருப்பவை பொய்யான கையெழுத்துகள் என்று கூறப்படுகிறது, அதை போலீசாரும் விசாரித்து வருகிறார்கள் என்றார்.
தேர்தலுக்குமுன் “1MDB” குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தால் நீங்கள் ஊமையாக இருப்பீர்கள், “1MDB” குற்றச்சாட்டுகளை தேர்தல் பரப்புரையில் திரும்ப எடுத்துரைத்தால் செவிடன்போல் இருக்க போகிறீர்கள் ! இதுல வீராப்பு பேச்சு ஒரு கேடா ?
இவனே கிழே இல்லாத போட்டயன் மலையிடம் மொதுறான் பாருங்க வெட்க கெட்ட ஜென்மம் மக்களை சிரமபடுத்தி அதில் சுகம் காணும் இந்த BN புழுதிகள் அழியணும்