பேராக், கிரியானில், புக்கிட் மேரா ஏரியைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதால் ஏரியில் நீர்மட்டம் குறைந்து போகும் நிலை உருவாகலாம் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சஹாபாட் ஆலம் மலேசியா(எஸ்ஏஎம்) எச்சரிக்கிறது.
“அதன் விளைவாக கிரியான் மாவட்ட தானிய சேமிப்புப் பகுதியும் அருகில் செபராங் பிறையில் 24,000 ஹெக்டார் நெல்வயல்களும் பாதிக்கப்படும்”, என எஸ்ஏஎம் தலைவர் எஸ்.எம்.முகம்மட் இட்ரிஸ் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாகவும் செயல்பட்டு வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதையெல்லாம் யாரு சட்டைப்பண்ண போவதில்லை! பலருக்குப் பாதிப்பு என்றால் ஒரு சிலருக்கு பெரிய லாபம். அதுவும் ஆளும் வர்க்கத்திற்கு!
இது ரோச்மஹ்வின் projek என்று சம்ப்ரி கடந்த vaaram சிதியாவனில் கூறினார்