சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பங்களா வீடு வாங்கிய விவகாரம்மீதான விசாரணை அறிக்கையைத் திரும்பவும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கே அனுப்பி வைத்திருக்கிறார்.
“விசாரணை அறிக்கைகளில் எல்லா விளக்கங்களையும் படித்துப் பார்த்த பின்னர் மேலும் சிலவற்றைப் பற்றி விசாரிக்க வேண்டுமென இத்துறை கருதுகிறது.
“எனவே, விசாரணையைப் பூர்த்தி செய்ய விசாரணை அறிக்கைகளை மீண்டும் எம்ஏசிசி-க்கே அனுப்பி வைத்திருக்கிறோம்”, என அபாண்டி ஓர் அறிக்கையில் கூறினார்.
எம்ஏசிசி விசாரணையை முடித்து விரைவில் அறிக்கைகளைத் திருப்பிக் கொடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அபாண்டி குறிப்பிட்டிருந்தார்.
பரவாயில்லை! இப்படியும் அப்படியும் தள்ளிக்கொண்டு இருங்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கப் போவதில்லை! இவர்கள் எல்லாம் அரசியலில் ஆழம் பார்த்தவர்கள்!
அம்னோ ஈனங்கள் செய்வது எல்லாம் விசாரணைக்கு உட்பட மாட்டா. மற்றவர்கள் தான் தவறுகள் இழைப்பவர்கள்– இதுதான் தெரிந்த செய்தி ஆயிற்றே.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சமர்பித்த விசாரணை அறிக்கையை, மீண்டும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கே திரும்ப அனுப்பி வைத்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையின் திறமையை கேலிக்குரியதாக்கி விட்டார் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி.