பாஸ்மீது கொண்ட கோபத்தின் காரணமாக டிஏபியும், பார்டி அமனா நெகாரா(அமனா)வும் சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்ற சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்து விட்டார்கள் என அம்னோ எம்பி ஒருவர் கூறினார்.
இடைத் தேர்தலில் நேரடிப் போட்டி என்றால் அது எதிரணிக்குச் சாதகமாக அமையும் என்று அஸ்மினும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் கூறி வந்தது சரியான கணிப்புத்தான் என்று பிஎன் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மன்ற(பிஎன்பிபிசி)த் தலைவர் ஷாரிர் அப்துல் சமட் பிஎன்பிபிசி வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.
பிகேஆர் துணைத் தலைவர் கூறியதை பிகேஆரும் அதன் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும்கூட புறந்தள்ளி விட்டனர் என்றாரவர்.