தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்குரைஞர் தொழில் செய்வதற்குக் குறுக்கீடாக உள்ளது என்றும் அதனால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பிகேஆர் தலைவர் என்.சுரேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“அன்வார் இப்ராகிமுக்காக வாதாடி விட்டு கூட்டரசு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது தேச நிந்தனைக்குரிய வகையில் பேசியதாக என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“ஒரு வழக்குரைஞர் என்ற முறையில்தான் அதைக் கூறினேன். இது என் வழக்குரைஞர் தொழிலில் குறுக்கிடுவதாகும்.
“அந்த அடிப்படையில் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படவோ இரத்துச் செய்யப்படவோ வேண்டும்”, என சுரேந்திரன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவர் தம்முடைய மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்தார்.
சுரேந்திரன், 2014-இல் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும்போது அன்வார்மீதான இரண்டாவது குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட ஓர் அரசியல் சதி என்று கூறினாராம்.
வழக்குரைஞர் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டும் என்பதற்குத் தானே தேச நிந்தனைக் குற்றச்சாட்டு!
தேச நிந்தனை இயற்றப்பட்டதே இதற்காகத்தானே!
என்ன செய்வது நீங்களும் சும்மா இருக்காம எதாவது பிரச்சனையில் மாட்டிகிரிங்க..தொகுதி மக்களையாவது சென்று பார்க்கிறிங்களா..?