ஹுடுட் சட்டவரைவை நிராகரிக்கிறார் நன்சி: வாக்களிக்க நாடாளுமன்றம் வர மாட்டார்

nancy-billபிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி    ஹுடுட்  சட்ட  அமலாக்கத்துக்கு  வழிகோலும்   சட்டத்  திருத்தங்களுக்குத்  தம்  ஆதரவு  இல்லை  என்பதை இன்று  மீண்டும்  வலியுறுத்தினார்.

அச்சட்டத்   திருத்தங்களை  நிராகரிக்கும்  சரவாக்  பிபிபி  நிலைப்பாட்டுக்கு  ஏற்ப  தாம்  இவ்வாறு  முடிவெடுத்திருப்பதாக  அவர்  சொன்னார்.

அப்படியானால்  சட்டவரைவுக்கு  எதிராக  வாக்களிப்பாரா  என்று  வினவியதற்கு   அது  நாடாளுமன்றத்தில்  வாக்கெடுப்புக்கு  விடப்படும்போது  தாம்  அங்கு  இருக்கப்போவதில்லை  என்றார்.

“அதை  நிராகரிப்பது  மட்டுமல்ல. அன்று  அங்கு  இருக்கவே  மாட்டேன்.

“அது  தாக்கல்  செய்யப்பட்டபோதுகூட  நான்  அவையில்  இல்லை”, என  நன்சி இன்று  சுங்கை  புசாரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.