அதிகாரிகள் குடிமக்கள் பிரகடனத்தைப் பறிமுதல் செய்து அதில் கையொப்பமிட்டவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே அதன்மீது நிறைய புகார்கள் கூறப்படுகின்றன என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆதரவாளர்கள் குடிமக்கள் பிரகடனத்தை இழித்துப் பேசுகிறார்கள்; அதில் நிறைய பொய்கள் இருக்கின்றனவாம்.
“அதை போலீஸ் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
“அப்போதுதானே போலீஸ் அதில் கையொப்பமிட்டோரை அடையாளம் காண முடியும், மிரட்ட முடியும்”, என முன்னாள் பிரதமர் தம் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்கள் அவர்களின் பிரிம் உதவியை இழப்பார்கள், பிள்ளைகளுக்கான உதவிச் சம்பளங்களை இழப்பார்கள், வணிக வாய்ப்புகளையும் மற்ற நன்மைகளையும் இழப்பர் என்றெல்லாம் ஏற்கனவே மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் மகாதிர் கூறினார்.
“நஜிப்பின் அரசாங்கம் மிரட்டலாலும் தொல்லைகளாலும் பலர் பிரகடனத்தில் கையெழுத்திட அஞ்சுகிறார்கள்.
“தொல்லைகள், மிரட்டல்கள் இல்லையென்றால் மேலும் பலர் கையெழுத்திடுவார்கள்”, என்றாரவர்.
உங்கள் சிஷ்யர்கள் சரியாகத்தான் நீங்கள் படித்துக் கொடுத்ததை பின்பற்றுகிறார்கள் என்பதற்காகப் பெருமைப் படலாம்!