சுங்கை புசார் இடைத் தேர்தலுக்கான பாஸ் வேட்பாளர் டாக்டர் ரானி ஒஸ்மான், நிறுவனப்பூர்வமான மாற்றங்களுக்காக பெர்சே நடத்தும் போராட்டத்துக்கு தம் ஆதரவு உண்டு என்று உறுதியளித்தார்.
“நமது வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கலாம்.
“வழிமுறைகள் வேறுபட்டால் பரவாயில்லை, இலக்குகளை அடைவதுதான் முக்கியம்”, என்று நேற்றிரவு முகநூலில் ரானி குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை இடைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரிக்கிறார்களா என்று பெர்சே முன்வைத்த கேள்விக்கு எதிர்வினையாக ரானி அவ்வாறு குறிப்பிட்டார்.
பெர்சே-இன் எல்லாக் கோரிக்கைகளையுமே தாம் ஆதரிப்பதாக கூறிய ரானி, நஜிப் மட்டுமல்ல அம்னோவும் ஒழிய வேண்டும் என்பதே தம் விருப்பம் என்றார்.
ஒரு பக்கம் ஒழிய வேண்டும்! ஒரு பக்கம் ‘ஊடூட்’ ஆதரவு வேண்டும்! அடாடா!
ராணி ஒஸ்மான் இப்போது இனிக்க இனிக்க பேசுவீர்கள் பெர்சே நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பீர்கள் என்று!தேர்தல்காலங்களில்தான் உங்கள் கட்சியின் இனிப்பான பேச்சு மற்ற நேரங்களில் இன வெறியை தூண்டுவது உங்கள் பேச்சும் நீங்களும்!
இவனை எல்லாம் நம்ப முடியுமா– நம்பிக்கை நாயகனே நம்முடைய மூஞ்சில் கரி பூசினான் -எவனையும் நம்பமுடியாது- ஒரு கூற அரசின் பணம் தான் சம்பளமாக பெறுவதாக கூறுகிறான்… நாடு வளர்ச்சி பெரும்.
சொல்ல சொல்ல இனிக்குதடா. வாக்கு வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பொய் சொல்லாதிர்கள் அம்னோ பங்காளிகளே.