பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி வெளியில் தெரியாத செய்தியை வெளியிடப்போவதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி கூறினார்.
இன்று பிற்பகல் கோலா கங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அதைத் தெரிவிக்கப்போவதாக அவர் சொன்னார்.
ஆளும் வர்க்கத்தினரும் அவர்களின் குடும்பத்தாரும் “சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் வேளையில் ராஜா-ராணி போன்று வாழ்க்கை நடத்தி வருவதை”க் கடந்த சில மாதங்களாக மக்கள் மறந்து இருந்து விட்டார்கள்.
“அதனால், ஜெட்டில் பறந்து சொகுசான வாழ்க்கை நடத்திவரும் ரோஸ்மா பற்றி செய்தி ஒன்றை இன்று வெட்ட வெளிச்சமாக்கப் போகிறேன்”, என்று ரபிசி கூறினார்.
நீங்கள் அம்பலப்படுத்துவீர்கள். அவரைக் கம்பளம் போட்டு வரவேற்க ஒரு பெரிய கூட்டமே உள்ளது! ஊகூம்…! ஒன்றுக்கும் ஆகாது!
இப்போது என்ன சொன்னாலும் ஏறாது–அவன் ஆட்சியில் இல்லாத போதுதான் ஏதும் செய்ய முடியும்– இப்போதைய காகாதிமிர் ஆட்சியில் இருக்கும் பொது அவனை யாரவது தொட முடிந்ததா? ஆனால் இப்போது? அவனால் மேலே உட்கார்ந்தவன் எல்லாம் அவனைப்பற்றி பேசுகிரான்கள்- அதிகாரம் இல்லையே!
யோவ் அதான் தெரிந்த விசயமாச்சே நீ சொல்லித்தான் அம்பலமாகுதா .
ஏழை பேச்சு அம்பலத்தில் ஏறாது.உங்கள் அறிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு.