பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திவரும் அபு சயாப் தீவிரவாத கும்பல், அது பிடித்து வைத்திருந்த நான்கு சரவாக் கடலோடிகளை விடுவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நால்வரும் இன்று காலை சாபா, சண்டகான் திரும்பினார்கள் என இன்று த ஸ்டார் அறிவித்தது.
“மலேசிய, பிலிப்பீன்ஸ் பேச்சாளர்கள் அக்கும்பலுடன் பல சுற்றுப் பேச்சுகள் நடத்திய பின்னர் பிணையாளிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பதில் வெற்றி பெற்றனர்”, என அச்செய்தி கூறிற்று.
வொங் டெக் காங், வொங் டெக் சீ, ஜானி லாவ், ஹுங் சிங் ஆகிய அந்நால்வரும் ஏப்ரல் முதல் தேதி சாபாவின் பூலாவ் லிகிடானுக்கு அப்பால் கடத்தப்பட்டனர்.
இதற்குமுன் அபு சாயாப் அவர்களை விடுவிப்பதற்கு ரிம18 மில்லியனைப் பிணைப்பணமாகக் கோரியிருந்தது.