சிறார்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்டதற்காக பிரிட்டனில் அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரிச்சர்ட் ஹக்கலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க போலீஸ் பிரிட்டனின் அமலாக்க அதிகாரிகளுடனும் மலேசிய அமைச்சு ஒன்றுடனும் ஒத்துழைக்கும்.
“போலீஸ், பிரிட்டனின் குற்றவியல் வாரியத்துடனும் மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடனும் ஒத்துழைத்து ஹக்கலால் பாதிக்கப்பட்ட சிறார்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மனவியல் ஆதரவுச் சேவைகளையும் உதவிகளையும் வழங்கும்”, என போலீஸ் அறிக்கை ஒன்று கூறியது.
பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவ அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது.
தவறு நடந்தது நமது நாட்டில்! ஆனால் அவனைக் கைது செய்தவர்கள் பிரிட்டிஷ் போலிசார்! ஏதோ ஒன்றிண்டு என்றால் மறைத்து விடலாம்! ஆனால் 200 மேற்பட்ட என்றால் அது எப்படி நமது நாட்டு போலிசாருக்குத் தெரியாமல் போகும்? வழக்கம் போல அலட்சியம் என்று கொள்ளலாமா?
மலேசியா போலீசா போங்கடா நீங்களும் உங்க ……………….
நமது நாட்டின் கல்வி துணையமைச்சர் கமலநாதன், பத்தாங் பெர்ஜுந்தை தமிழ் பள்ளியில் மாற்று மொழி ஆசிரியர் தமிழ் மாணவிகளிடம் சில்மிஷம் புரிந்ததை, “இது நாட்டில் நடக்காததா ?” என்று பெருந்தன்மையாக கூறியதுபோல், போலீஸ் பிரிட்டனின் அமலாக்க அதிகாரிகள் “இது உலகத்தில் நடக்காததா ?” என பெருந்தன்மையோடு பெரிது படுத்தாமல் இருந்திருக்கலாம்.