இஸ்தான்புல்லில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள ரோஸ்மா மன்சூர் தனி ஜெட் விமானத்தில் பறந்து சென்றதாகக் கூறுகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி.
மே 27-இல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி பெர்மாத்தா சார்பில் 3ஜி சிறார் நல விருதைப் பெற்றுக்கொண்டார். அச்செய்தி மைய நீரோட்ட ஊடகங்கள் அத்தனையிலும் வெளிவந்தது.
ஆனால், அதற்கு அவர் எப்படிச் சென்றார் என்ற செய்தி எதிலும் வரவில்லை.
“அவர் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு தனி ஜெட் – ஏர்பஸ்-319- விமானத்தில் சென்றார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்”, என ரபிசி இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அவருடைய பயணதுக்காகவே அது வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது.
ரோஸ்மா பொதுப்பணத்தில் செயல்படும் ஒரு திட்டமான பெர்மாத்தா சார்பில் அவ்விருதைப் பெற்றுக்கொண்டார் என்பதால் அப்பயணத்துக்குப் பணம் செலுத்தியது யார் என்று கேட்பதில் தவறில்லை என ரபிசி கூறினார்.
“அவர்தான் பயணம் செய்தார் என்பதால் அவர்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நஜிப்புக்கு இதில் பொறுப்புண்டு என்பதால் அவரும்தான் பதில் சொல்ல வேண்டும்”, என்றார்.
மலேசியாவின் இமெல்டா மார்கோஸ்!
பணம் செலுத்தியது நான் தான் என்று யாராவது ஒரு அரபுகாரன் வருவான்! பொறுமை காக்க!
ரபிசி விமானப்படை அம்னோ குஞ்சுகளுக்கு அக்காலத்திலிருந்தே ஆகாய டாக்ஸி -ஆனால் இன்று சொல்லவா வேண்டும்? தற்காப்புக்கு முக்கியத்துவம் கிடையாது. என்ன சொல்ல? சொன்னாலும் யாருக்கு என்ன அக்கறை?
அவர்களுடைய விமானத்தில் எங்கு வேண்டுமானாலும் பறப்பார்கள் அம்நோக்காரனே வாய் மூடிக்கிடக்கிறான்…
இவள் ஊர் சுட்ருவதுக்கு நாம் பணம் கொடுக்கணும் ………………..
இரண்டு விமான பேரிடர்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களை இப்படி ஏதாவது சொல்லி அவர்களது முயற்சிகளுக்கு தடையாக இருக்காதீங்க ரபிசி !
மக்கள் ஜி ஸ் டி வறி வசூல் பணம் அம்னோவுக்கு கொண்டாடம்.
இடைதேர்தல் வாக்காளர்கள் விளித்தால் நல்லது.