கண்ணால் காண்பதும் பொய்யே என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பொறுத்தவரை உண்மையானது. முகநூல் கண்டுபிடிப்பாளரும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான Mark Zuckerberg-கை முதன்முதலில் பார்த்தபோது அவர் அத்தனை பெரிய அறிவாளியாக நஜிப்புக்குப் படவில்லை.
ஆனால், இப்போது, அவர் “சூப்பர் அறிவாளி” என்கிறார்.
“முதல் பார்வையில் அவ்வளவு பெரிய அறிவாளியாக தென்படவில்லை.
“ஆனால், உண்மையில் அவர் மிகப் பெரிய அறிவாளி. ஆனால், அறிவாளிபோல் காட்சியளிக்க மாட்டார்”, என்று சிரித்தவாறே குறிப்பிட்டார். கோலாலும்பூர் லெ மெரிடியனில் நடைபெற்ற இலக்கவியல் மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் அங்கு கேள்வி-பதில் அங்கமொன்றில் கலந்துகொண்டார்.
அமெரிக்காவுக்கு அலுவல் நிமித்தம் பயணம் மேற்கொண்டிருந்தபோது சிலிகோன் பள்ளத்தாக்கில் Zuckerberg அலுவலகத்துக்கும் சென்றதாக நஜிப் கூறினார்.
முதல் பார்வையிலேயே உங்களை நாங்கள் அறிவாளியாக நினைத்ததின் பலனை இப்போது நாங்கள்அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!
“முதல் இரவினிலே” என்பதைத்தான் “முதல் பார்வையிலே” என்று தவறுதலாக கூறி விட்டாரோ என்னவோ ?