பினாங்கில் மற்றுமொரு கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளான கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. கடந்த வாரத் தாக்குதலின்போது ஏற்பட்ட சேதத்தைவிட புதிய தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதம் அதிகமென்று கூறப்படுகிறது.
பெனாந்தி தோட்டத்திலிருக்கும் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் கோயிலில் நள்ளிரவின்போது புகுந்து சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன என்று பினாங்கு முதலமைச்சர் II பி.இராமசாமி தெரிவித்தார்.
“பெனாந்தியில் முந்தைய சம்பவம் சரியாக ஒரு வாரத்துக்குமுன் வியாழக்கிழமை நடந்தது. இன்று சிலைகள் உடைப்பட்டுக் கிடந்தன.. முந்தைய தாக்குதலைவிட இதில் சிலைகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டிருந்தன”, என இராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இது உள்வேலையா அல்லது வெளியார் செய்ததா என்பது போலீசாருக்கே உறுதியாக தெரியவில்லை என்று கூறிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நமது நாட்டின் கல்வி துணையமைச்சர் கமலநாதன் கூறுவதைப்போல் “இது நாட்டில் நடக்காததா ?” என்று மனத்தைத் தேற்றி கொள்ள வேண்டியதுதான் ! ஏனென்றால் நம் நாட்டில் உள்ள நாங்கள்தான் “தமிழ் பற்றாளர்கள்”/”தமிழுக்காக உயிர் கொடுப்போம்” என்று கூறும் தமிழனுக்கு “ஈன தமிழன்” SORRY “ஈழ தமிழனுக்கு” தீர்வு காண்பதிற்க்கே நேரம் போதவில்லை.
“ஸ்ரீகர முதல்வன் wrote on 7 June, 2016, 10:25
ஹூடுட் சட்டத்திற்கு எதிரான கட்சியின் எதிர்ப்பை மஇகா தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படுத்தாது என்றால் இந்து கோயில்களை உடைப்பதற்கு கட்சியின் ஆதரவை வெளிபடுத்தி மலாய்க்காரகளை உற்சாக படுத்துவீர்கள் போலும்.”
கருத்து தெரிவித்து இரண்டே நாளில் கோயில் உடைப்பா ? பரவாயில்லையே ! மஇகா இதே சுறுசுறுப்பை இந்தியர்களின் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தினால் நன்று.
இந்த கோயில் உடைப்பு சம்பவம் பினாங்கில் நடந்திருப்பதால்..மஇகா துடுப்புகள் தூக்கு தூக்கிக்கள் பாயிந்து கொண்டு போவார்களாம் ஆனால் பேராகில் நடந்த கோயில் உடைப்பு சம்பவத்தின் பொது வாயையும் சூ……….யும் மூடிகிட்டு இருந்தீர்கள் அல்லவா!ஏனென்றால் அது உங்கள் பிஎன் ஆட்சியில் கீழ் செயல்படும் மாநிலங்களில் ஒன்று ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஜாங்கில் ஒரு வீட்டில் சாமி பீடத்தை நகராண்மை கழகத்தினர் உடைத்ததினால் டத்தோ மோகன் பாயிந்து கொண்டு சென்றார் பினாங்குக்கு எப்போ பாய போகிறீர்கள்?
எனக்கு என்னம்மோ ராமசாமியின் சதி நாச வேலையாக இருக்குமோ ! என்ற சந்தேகம் எழுகிரது !