இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரப்பர் விலைகள் வீழ்ச்சி அடைந்து வரும் வேளையில் ரப்பர் தொழிலுக்கு உதவியாக ரிம194மில்லியன் மான்யம் வழங்கப்படுவதாக அறிவித்தார்.
அந்த உதவியை அறிவித்த கையோடு ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார்.
“உங்கள் விருப்பதை நான் நிறைவேற்றி விட்டேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
“என் விருப்பம், நீங்கள் பிஎன் வேட்பாளருக்கு உதவ வேண்டும். அவ்வளவுதான்”, என்றார்.
நஜிப், இன்று காலை கோலா கங்சார் டேவான் ஜுப்ளியில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அந்நிகழ்வுக்கு பிஎன் வேட்பாளர் மஸ்தூரா முகம்மட் யாசிட்டின் பிள்ளைகள் வந்திருந்தனர். மஸ்தூரா வரவில்லை. அவர் இன்னும் துக்கம் அனுசரிக்கிறார்.
இந்த உதவி வாக்காளர் ஆதரவைப் பெறும் முயற்சி அல்ல என்று கூறிய பிரதமர், ரப்பர் தொழிலுக்கு அரசாங்கம் இப்படி மான்யம் வழங்குவது இது மூன்றாவது முறையாகும் என்றார்.
………….பணம் பாதாளம் வரை பாயும்
அருமை பிரதர் ! லஞ்சம் கொடுப்பதில் உங்கள் பாணியே சிறப்பு !