பாஸ்: சிவில் சட்டத்தில் பிரம்படி கொடுப்பது ஷியாரியா சட்டத்தைவிடவும் கொடூரமானது

raniiசுங்கை  புசாரில்  களமிறக்கப்படும்  பாஸ்  வேட்பாளர்  டாக்டர்  ரனி  ஒஸ்மான்,  சிவில்  சட்டத்தின்படி  கொடுக்கப்படும்  பிரம்படி  தண்டனை  ஷியாரியா  சட்டத்தில்  கொடுக்கப்படும்  பிரம்படிகளைவிட  ‘கொடூரமானது’ என்கிறார்.

ஒரு  மருத்துவர்  என்ற முறையில்  இதைக்  கூறுவதாக  அவர்  குறிப்பிட்டார்.

“பிரம்பால்  அடிக்கப்பட்டவர்களுக்குச்  சிகிச்சை  அளிக்கும்  மருத்துவர்களுக்குத்  தெரியும்  அது  எவ்வளவு  வலிக்கும்  என்பது.  அதன்பின்னர்  உடைகள்  அணிவதுகூட வலிக்கும்”, என  சுங்கை  புசார்  பாஸ்  தலைமையகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  அவர்  இவ்வாறு  கூறினார்.

ஷியாரியா  சட்டத்தில் உடலைக்  காயப்படுத்தும்  நோக்கத்தில்  பிரம்படி  கொடுக்கப்படுவதில்லை, குற்றம்  செய்தவரை  வெட்கப்படச்  செய்வதுதான்  அதன்  நோக்கம்  என்று  ரனி  கூறினார்.

“இஸ்லாத்தில்  பிரம்படி  வேறு  வகையானது. நான்  உங்களில்  ஒருவரை  10 தடவை  அடித்தால்கூட  அவ்வளவாக  வலிக்காது”, என்றார்.