முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சுங்கை புசார் இடைத் தேர்தலில் தம் ஆதரவு பார்டி அமனா நெகாரா வேட்பாளர் அஸ்ஹார் அப்துல் ஷுக்குருக்குத்தான் என்று பிரகடனம் செய்தார்.
அஸ்ஹார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும் குடிமக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மகாதிர் அவ்வாறு அறிவித்தார்.
“நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை. அம்னோவிலோ வேறு எந்தக் கட்சியிலுமோ இல்லை. அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையில்தான் இங்கு வந்தேன்.
“நஜிப்பை அகற்றுவதற்கான குடிமக்களின் பிரகடனத்தில் கையெழுத்திட்ட அமனா கட்சிக்காரருக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன்”. டிஏபி ஏற்பாடு செய்திருந்த ‘1எம்டிபி-யும் ரிம2.6 பில்லியன் ஊழலும்’ கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றியபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
கையைத் தூக்கினாலும் காலைத் தூக்கினாலும் எங்களுக்கு ஆகப்போவது ஒண்ணுமில்லை! அரசனை நம்பியது போதும்! புருஷனையே நம்புகிறோம்!
அம்னோக்காரர்கள் உங்களை என்னதான் தரக்குறைவாக பேசினாலும் கவலை வேண்டாம். உங்களது குற்றச்சாட்டுக்கள் தொடரட்டும்.
நஜிப் தம் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு செவிடன்போல் நடிக்கும்போது, உங்களுக்கு நடிக்க தெரியாதா என்ன ?