பிரதமரின் துணைவியார் என்ற முறையில் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்கும் உரிமை ரோஸ்மாவுக்கு உண்டு

 

jethiredபிரதமரின் மனைவி என்ற முறையில் தனிப்பட்ட ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்கும் ரோஸ்மாவின் உரிமையும் கடமையும் குறித்து எவரும் கேள்வி எழுப்பக்கூடாது என்று அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா மலேசியாகினியிடம் கூறினார்.

ஆகவே, இந்தப் பயணத்திற்கான விமானம் தனிப்பட்ட உபயோகத்திற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது என்ற தோற்றத்தை உருவாக்கி பிரதமரின் துணைவியார் அல்லது பிரதமரின் உரிமையை மறுக்கக்கூடாது என்று அனுவார் மேலும் கூறினார்.

இஸ்தான்புல் பயணத்திற்கு ரோஸ்மா இந்த தனிப்பட்ட ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தார் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரமலி கூறியிருந்தது பற்றி கேட்ட போது கோலகங்சார் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுவார் இவ்வாறு கூறினார்.