கோலகங்சார் இடைத் தேர்தல் வேட்பாளர் அஹமட் தெர்மிஸி ரம்லி மற்றும் சுங்கை புசார் வேட்பாளர் அஸ்ஹார் சுகோர் ஆகிய இருவரையும் ஆதரித்து சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி இவ்வாரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
அமனா கட்சியின் வேட்பாளர்கள் கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாக்கத்தான் ஹரப்பானில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாரிசான் நேசனல் ஆரூடம் தெரிவித்தற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஸ்மின் அலி பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலுடன் சேர்ந்து கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என்று பிகேஆரின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.
எம்பி (அஸ்மின்) அமனாவின் வேட்பாளர் நியமனத்திற்கு வந்திருந்ததை நூருல் சுட்டிக் காட்டினார்.
நாம் நட்சத்திரம் எல்லாம் பார்த்து தான் அஸ்மின் களம் இறங்குவார்!
PKR – இடைதேர்தலில் வெற்றி பெறுமா ? என்பது வெறும் பிரசாரத்தில் மட்டும் இல்லை, கட்சிக்குள் , தலைவர்களுக்குள் நடக்கும் சிண்டுமுடிச்சி சண்டையை முதலில் நிறுத்துங்கள் . பாஸ் – அமானா என உடைந்து சந்தி சிரிங்கும் போது எப்படி , யாரை மக்கள் நம்புவது ?? BN வெற்றிபெற்றாலும் PAS அல்லது AMANAH வெற்றிபெற்றாலும் நம்வங்க பாடு திண்டாட்டம்தான் . ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல BN வெற்றி உறுதியாகி விடும்போல் தெரிகிறது !! ஜெட் பாரு லகி .. !!
பதவி வெறி பிடித்த பலர் இந்த நாட்டில் இருக்கின்றனர்– கொள்கை உடையவர்கள் மிக சிலரே.