மலேசியப் பிரதமர் நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் மலாய் ஆட்சியாளர்களையும் மிஞ்சிய படாடோபமான வாழ்க்கையில் திளைத்துள்ளனர் என்று திரங்கானு இளவரசர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்திடம் இதர ஏழு விமானங்கள் இருக்கையில், பிரதமரின் துணைவியார் ஒரு தனிப்பட்ட ஜெட் விமானத்தை இரண்டு மாதங்களுக்கு ரிம86 மில்லியனுக்கு வாடகைக்கு எடுத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“மலேசியா மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், இது மன்னிக்க முடியாத செயலாகும். அரசாங்கத்திடம் ஏழு ஜெட் (விமானங்கள்) இருக்கின்றன. பிறகு, ரிம86 மில்லியனுக்கு இன்னொரு ஜெட்டை வாடகைக்கு எடுக்க வேண்டிய தேவை என்ன”, என்று ராஜா பாரின் ஷா ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார். ராஜா பாரின் கோலதிரங்கானு நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
கடந்த ஆண்டு ஜூலையில், நாடாளுமன்றத்தில் ஏழை பள்ளி மாணவர்களுக்கான ரிம200 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் வெறும் ரிம10 மில்லியனுக்கு குறைக்கப்பட்டதை ராஜா பாரின் சுட்டிக் காட்டினார்.
ஆனால், நாட்டு மக்களின் நலனைப் பேண வேண்டிய அவர்கள் இப்போது ரிம86 மில்லியனுக்கு ஒரு ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக என்று அவர் மேலும் கூறினார்.
பொது நிதியைச் செலவிடுகையில் உண்மையான மன்னர்கள்கூட மிகக் கவனமாக இருக்கின்றனர் என்றாரவர்.
காலஞ்சென்ற திரங்கானு சுல்தான் இஸ்மாயில், இவர் 1965 லிருந்து 1970 வரையில் பேரரசராகவும் இருந்தவர், எப்படி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பொது நிதியைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருந்ததார் என்பதை ராஜா பாரின் தெரிவித்தார்.
காலஞ்சென்ற சுல்தான் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு மிக நெருக்கமானவராக இருந்த போதிலும், அவர் தேசிய நிதியையும் வசதிகளையும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார் என்றும், ஆரவாரமற்ற வாழ்க்கை வாழ்ந்தார் என்றும் பாரின் கூறினார்.
“இன்று, பிரதமரின் துணைவியாரும் குழந்தைகளும் அசாதாரணமான தனிச்சலுகைகளுடன் இருக்கின்றனர்”, என்று அவர் மேலும் விவரித்தார்.
முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் துணைவியாரை “முதல் பெண்மணி” என்று அழைக்கப்பட்டதை நாம் கேள்விபட்டதே இல்லை என்று கூறிய ராஜா பாரின், இப்போது அது தற்போதைய பிரதமரின் துணைவியாருக்கு ஒரு விதிமுறையாகி விட்டது என்று பாரின் வருத்தப்பட்டுக் கொண்டார்.
நஜிப் மலாய் ஆட்சியாளர்களுக்குரிய மரியாதையை அளிக்கத் தவறி விட்டார் என்று குற்றம் சாட்டிய ராஜா பாரின், தேசியப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் செய்வதற்காக மலாய் ஆட்சியாளர்கள் திருப்பிய அனுப்பிய மசோதாவை தேசியப் பாதுகாப்புச் சட்டமாக அரசுப் பதிவு ஏட்டில் பதிவு செய்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
இதில் என்னடா ஆச்சரியம்— அந்த நாளில் இருந்து இப்படித்தானே நடந்து வந்திருக்கிறது– என்ன இப்போது கட்டுக்கு அடங்கா நிலையில் ஊழல் அதிவேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது– இதற்க்கு எல்லாம் பெரும்பான்மை மலாய்க்காரன்களே காரணம் இந்த ஊழல்வாதிகளை ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க நீங்கள் தானே ஆதரவு கொடுக்கின்றீர்கள் — எல்லாம் இன அடிப்படையில் தானே செயல்படுகின்றது. நீதி நியாயம் செத்து எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டதுடா.
ஆசியாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?
ஜெட் விமானங்களை வாடைகைக்கு எடுக்கும் போது அங்கு ஒரு கோடிஸ்வர பூமிபுத்ரா உருவாகிறார்! அதை நீங்கள் தடுப்பது தேச நிந்தனை அல்லவா!